இலங்கையில் பெண்கள் சுகாதாரம் தொடர்பில் முன்னிலை வகித்து வருகின்ற நாமமான Eva, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது.
2025ம் ஆண்டில் நாட்டிலுள்ள பாடசாலைகளை எட்டும் நோக்குடன், மாதவிடாய் குறித்த தப்பான அபிப்பிராயங்களுக்கு தீர்வு காணும் அதேவேளையில், இது குறித்த முக்கியமான அறிவை மாணவியர் மத்தியில் பரப்புகின்றது.
மாற்றத்திற்கு வித்திடும் இந்த முயற்சியின் ஆரம்ப நிகழ்வானது டிசம்பர் 9 அன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இடம்பெற்றதுடன், அறிவூட்டல், புரிந்துணர்வு மற்றும் அரவணைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை நோக்கிய நாடளாவிய பிரச்சாரத்திற்கு களம் அமைத்துள்ளது.
Eva-இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து முன்னெடுக்கின்ற மாதவிடாய் குறித்த சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வுத் திட்டமானது கல்வியமைச்சின் ஆதரவுடன் நடத்தப்படுவதுடன், மாதவிடாய் குறித்து சமூகத்திலுள்ள அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒன்றுபட்ட முயற்சியாகக் காணப்படுகின்றது.
மாதவிடாய் என்பது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாக அன்றி, சுகாதாரம் மற்றும் உயிர்ச்சக்தியின் அடையாளமாகப் போற்றப்பட வேண்டிய ஒன்று என்ற கலாசாரத்தை வளர்ப்பதே இம்முயற்சியின் நோக்கமாக உள்ளது.
பயன்மிக்க செயலமர்வுகள், இடைத்தொடர்பாடல் கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் நம்பத்தகுந்த தகவல் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை ஆகியவற்றின் மூலமாக மாணவியருடன் செயற்பாடுகளைப் பேணி, தன்னம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் மாதவிடாயை நோக்கும் வலுவை அவர்களுக்கு ஊட்டி, இது குறித்த புரிந்துணர்வு மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட புதிய தலைமுறையொன்றைத் தோற்றுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உப தலைவர் கௌரவ ஜெகத் அபேசிங்க அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,
“Eva உடன் இணைந்து, சிறுமியர் தன்னம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் மாதவிடாயை ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்படுகின்ற எதிர்காலமொன்றைக் கட்டியெழுப்பி, இது குறித்த அபிப்பிராயங்களை மாற்றும் முயற்சியை நாம் முன்னெடுக்கின்றோம்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் எமது அணுகுமுறையானது மிகவும் முக்கியமான இந்த சமூகப் பிரச்சினை குறித்து எமது அடைவுமட்டத்தை உச்சப்படுத்தி, விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
கல்வித் திணைக்களத்தின் மேல் மாகாணத்திற்கான மேலதிக கல்விப் பணிப்பாளர் - நிர்வாகம், எச்.என். பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“கல்வி என்பது வெறுமனே அறிவை மாத்திரம் வளர்க்கும் ஒரு விடயமல்ல, மற்றவர்களைப் புரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது.
மாதவிடாயை உணர்வுபூர்வமாகவும், மரியாதையுடனும் அணுகும் மனப்பக்குவத்தை எமது இளம் சிறார்கள் மத்தியில் வளர்க்க வேண்டிய ஒரு அவசர தேவையை இம்முயற்சி தீர்த்து வைக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சுரேஷ் ஸ்ரீனிவாசன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“இம்முயற்சியினூடாக, பெண்களும், சிறுமியரும் தமது பெண்மை குறித்து பெருமைகொள்வதையும், தன்னம்பிக்கையுடன் பெண்மையை அணுகுவதையும் ஊக்குவிப்பதே எமது நோக்கம்.
மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான, ஆரோக்கியமான உயிரியல் சார்ந்த செயல்முறை என்பதை சிறப்பாக புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொள்வதை இது முன்னெடுப்பதுடன், பழங்காலத்து களங்கங்களின் சுமையைப் போக்கி, பெண்கள் தமது ஆற்றலை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு அவர்களுக்கு வலுவூட்டுகின்றது,” என்று குறிப்பிட்டார்.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் ICL Brands (PVT) LTD. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி றொனி சாக்கோ அவர்கள் இதன் பரந்த இலக்கு குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“எதிர்கால தலைமுறைகளுக்கு வலுவூட்டுவதில் கல்வி மிகவும் முக்கியத்துவமானது என Eva வலுவாக நம்புவதுடன், எமது உடல் மற்றும் அதில் இயற்கையாக நிகழுகின்ற மாற்றங்கள் குறித்து துல்லியமான அறிவை இளம் சிறார்கள் பெற்றுக்கொள்வதற்கு நாம் இத்திட்டத்தின் மூலமாக வழிவகுக்கின்றோம்.
பூப்பெய்தல், மாதவிடாய் மற்றும் பெண் சுகாதாரம் போன்ற விடயங்கள் குறித்த தப்பபிப்பிராயங்களைப் போக்குவதற்கு இத்தகைய முயற்சிகள் மூலமாக எம்மால் உதவ முடியும்.
இலங்கை மக்கள் அனைவரும் அறிவார்ந்த மற்றும் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை கொண்ட சமூகமாக மாறுவதைத் தோற்றுவிக்கும் எமது பரந்த முயற்சிகளின் அங்கமாக இத்திட்டம் அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
International Cosmetics (Pvt) Ltd. (ICL) நிறுவனத்தின் முக்கியமானதொரு வர்த்தகநாமமான Eva, உச்சபட்ச சௌகரியம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் வகையில் வடிவமைக்கப்பட்ட புத்தாக்கமான தயாரிப்புக்களுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைச் சந்தையில் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வந்துள்ளது.
நாடெங்கிலும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்களை எட்டியுள்ளதுடன், மாதவிடாய் குறித்த அறிவை மேம்படுத்தி, பெண்கள் மற்றும் சிறுமியரின் நலனை ஊக்குவிப்பதில் Eva காண்பிக்கும் அர்ப்பணிப்பு, இம்முயற்சியூடாக மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மாதவிடாய் குறித்த தப்பான மரபுகளைத் தகர்த்து, பெண்களும், சிறுமியரும் சமூகக் களங்கத்திலிருந்து விடுதலை பெற்று, தமது திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்ற வெளிப்படையான கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுப்பகிர்வை Eva வளர்த்துவருகின்றது.
மனிதநேயம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, சுயாதீனம், தன்னார்வம், ஐக்கியம் மற்றும் உலகளாவிய தன்மை ஆகிய தனது பிரதான கோட்பாடுகளின் வழிகாட்டலுடன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது அரசாங்கத்தின் மனிதாபிமான முயற்சிகளுக்கு துணையாக இயங்கி வருகின்றது.
நெருக்கடி மற்றும் பாதகமான நிலைமைகளின் போது இலங்கை எங்கிலும் சமூகங்களின் நலனை உறுதிப்படுத்தி வருகின்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது, அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றினூடாக அர்த்தமுள்ள மாற்றத்தை முன்னெடுப்பதற்காக Eva உடன் கைகோர்த்துள்ளதுடன், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை மேம்படுத்தி, வலுவூட்டுகின்ற தனது இலக்கினை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அரவணைப்புடன், அறிவுபூர்வமான சமுதாயத்தை வளர்ப்பதற்கு, இம்முயற்சியில் கைகோர்க்க முன்வருமாறு பாடசாலைகள், கல்வி புகட்டுபவர்கள் மற்றும் சமூகங்களுக்கு Eva மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன அழைப்பு விடுக்கின்றன.
Image Caption - (இடமிருந்து வலம்) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆலோசகர் டொக்டர் சித்தார்த்த நாணயக்கார, மேல் மாகாண நிர்வாகம் மேலதிக கல்விப் பணிப்பாளர், எச் என் பெரேரா, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உப தலைவர் ஜெகத் அபேசிங்க, கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேஷ் ஸ்ரீPனிவாசன், ICL Brands (Pvt) Ltd. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி றொனி சாக்கோ, ICL Brands (Pvt) Ltd. நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் செலோனிக்கா பெருமாள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM