(எம்.ஆர்.எம்.வசீம்)
புதிய ஜனநாயக முன்னணி செயலாளருக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. பைசர் முஸ்தபாவை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி முறையான தீர்மானம் எடுக்கவிருக்கிறாேம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபாவின் பெயரை அந்த கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளமை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கேஸ் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்த சந்தர்ப்பத்தில் பங்காளி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தோம்.
அதன் பிரகாரம், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயருடைய கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ய தீர்மானித்தோம்.
அந்த முன்னணியின் செயலாளராக ஷர்மிலா பெரேராவுக்கு இந்த இணக்கப்பாடுகள் அடங்கிய ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது.
என்றாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரதி பங்காளி கட்சிகள் எவருக்கும் இதுவரை வழங்கவில்லை. ஒப்பந்தத்தை சமர்ப்பிக்கும் நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
தேசியப்பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டியது புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி தலைவர்களால் ஆகும். புதிய ஜனநாயக முன்னணி செயலாளருக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
அந்த தீர்மானத்தை மீறி தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி நிரப்புவது நம்பகத்தன்மையை முற்றாக மீறும் செயலாகும். அரசியல் திருட்டுச்செயலாகும். ரவி கருணாநாயக்கவின் நியமனம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதுடன் அது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி முறையான தீர்மானம் எடுக்கவிருக்கிறாேம் என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM