ft.lk
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்றத்திற்கான தனது உரையில் இனவாதம் மதவாதம் மதகோசங்களை அரசியல் கலாச்சாரத்திலிருந்து இல்லாமல் செய்யப்போவதாக சூளுரைத்ததிலிருந்து அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்து வருகின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், நீதியமைச்சர், அமைச்சரவை பேச்சாளர் ஆகியோரும் இதனை தெரிவித்துள்ளனர்.
இதுசிறந்த விடயம் இந்த தீமைகளை-இனவாதம் மதவாதம் -நாட்டிலிருந்து இல்லாமல் செய்யவேண்டும்,
ஆனால் இந்த கருத்துக்களை உற்றுநோக்கும்போது நல்லிணக்கத்திற்கான உண்மையான முயற்சி என்பதை விட அரசாங்கம் அரசியல்செய்வது போல தோன்றுகின்றது.
இதுவரை வடக்குகிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளோடு தொடர்புபட்ட சமூக பதிவுகள் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மாவீரர் தினம் என்பது தங்களின் உயிரிழந்த உறவுகளை மக்கள் நினைவுகூரும் தினம்.
30 வருட பிரிவினைவாத யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவது அரசாங்கத்திற்கு மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என்பதும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இவ்வாறான நினைவுகூரல்கள் பயங்கரவாதத்தி;ற்கு புத்துயிர் கொடுப்பவை என தெரிவித்து கட்டுப்பாடுகளை விதித்தமையும் நன்கு அறியப்பட்ட விடயம்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் அன்று இந்த நினைவுகூரல்கள் இடம்பெறுவது இதனை மேலும் பிரச்சினைக்குரியதாக்குகின்றது.
நினைவுகூரல்களை சமூக ஊடகங்களில் பதிவுசெய்தவர்களை அவர்கள் இனபதற்றத்தை உருவாக்குகின்றனர் என தெரிவித்து பலரை கைதுசெய்ததன் மூலம் அரசாங்கம் அளவுக்கதிகமான வித்தில் செயற்பட்டுள்ளது.
அதிகாரத்திற்கு வந்ததும் நீக்கிவிடுவோம் என தேசிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்;திருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது.தற்போதுள்ள சட்டங்களை பயன்படுத்தி தற்போதைய நிலையை கையாளவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள அரசாங்கம்,ஆனால் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது ஒரு தந்திரமான விடயம்,1979 இல் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிக சட்டமூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது,அதனை நீக்குவதற்காக பல விவாதங்களும் முயற்சிகளும் இடம்பெற்றன,எனினும் அரசாங்கங்கள் தங்கள் எதிராளிகளை மௌனமாக்குவதற்கு இதனை பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்திருந்ததால் அதனை நீக்கமுடியவில்லை.
ஆட்சிக்குவந்து சில வாரங்களே ஆன தேசிய மக்கள் சக்தியும் கருத்துவேறுபாடுகளை மாற்றுக்கருத்துக்களை இந்த சட்டத்தை பயன்படுத்தி மௌனமாக்குவது சுலபம் என்பதை அறிந்துகொண்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை போன்றது தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் அதனை நீக்குவதாகஉறுதியளித்துள்ள போதிலும் அதனை செய்யவில்லை.
முகநூலிலோ அல்லது டுவிட்டரிலோ தங்கள் கருத்துக்களை பதிவு செய்பவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் ஒன்லைன் பதிவுகளை கட்டுப்படுத்தலாம் என்பத பயன் அற்ற செயல் என்பதை அரசாங்கம் உணரவேண்டும்.
அப்படி செய்தால் அது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உரிமைகளை முடக்குவதாக அமையும்.
மேலும் இது ஊடகவியலாளர்களை மௌனமாக்குவதற்கு இட்;டுச்செல்லலாம் என்பது இன்னமும் ஆபத்தான விடயம். விளைவுகளிற்கு அஞ்சி ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் பாதையை பின்பற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.
மக்களை சிறையில் அடைப்பதன் மூலமோ அல்லது சட்டங்களை பயன்படுத்துவதன் மூலமோ இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் முடிவை காணமுடியாது.
தேவையான விடயம் என்னவென்றால் உண்மையான நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளே.
தேசிய மக்கள் சக்தியின் உயிராக உள்ள ஜேவிபி பல வருடங்களாக இனவாதம் மதவாதத்தில் சிக்குண்டிருந்தது.
புதியவர்கள் அதனை உறக்கத்திலிருந்து எழுப்பி இனவாதத்திற்கு எதிரான போராளிகளாக மாற்ற முயல்கின்ற போதிலும் தேசிய மக்கள் சக்தி பிழையான வழியிலேயே செல்கின்றது.
இதன் காரணமாக அரசாங்கம் அனுதாபத்தை சம்பாதிப்பதற்காக பயன்படுத்தும் இனவாதம் சிலரை ஏமாற்றலாம் சிலர் ஏமாற்றுப்படலாம் ஆனால் இது தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தியால் நிறைவேற்ற முடியாத பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் ஒரு முயற்சியே.
இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM