ஜா - எல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜா- எல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த விற்பனை நிலையத்தில் பணிபுரியும் சக பணியாளருடன் ஒன்றாக இணைந்து மதுபானம் அருந்தியுள்ள நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது சந்தேக நபரான சக பணியாளர் உயிரிழந்தவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்தவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான சக பணியாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM