இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலாளர் ஹென்றி டொனைட்டிடம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை (10) காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம்.
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து இன்னமும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக மக்களின் காணிகள் கடந்த காலங்களில் அவர்கள் இடம்பெயர்ந்திருந்த சந்தர்ப்பங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் தமது ஆளுகைக்கு உட்பட்டதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டமையால் தற்போது சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் இதனால் கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. வடக்கு மாகாணத்து மக்களின் முக்கியமான பிரச்சினையாக இது உள்ளது.
கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் இருப்பதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் . அவை விரைவில் பூர்த்தியாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
வலி. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசம் நீண்ட காலம் இருந்த வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டமை சிறந்த நடவடிக்கை . மக்கள் மேலும் வீதிகளை, காணிகளை விடுவிக்கக் கோருகின்றனர்.
அத்துடன் பாதுகாப்புத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் என்பன அகற்றப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளமையால் அதிகளவில் வருகின்றனர் . அடுத்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கின்றது.
மேலும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் இளையோருக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கும் நோக்கிலும் பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்படவுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது, பொதிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விரைவில் அதற்கும் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் தமிழகத்தில் அண்ணளவாக ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். அவர்கள் நாடு திரும்பினால் அவர்களுக்குரிய வாழ்வாதார, வதிவிட உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றது.
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் பிரதான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டபோதும் உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
அவற்றை எதிர்காலத்தில் விரைந்து அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம், தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே அபிவிருத்திகளைச் செய்து முடிக்கலாம் என நம்புகிறேன்.
அதேவேளை, ஐ.நா. முகவர் அமைப்புக்கள் ஊடாக பிரிட்டன் அரசாங்கம் கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு மேற்கொண்ட உதவிகளுக்கு நன்றி என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM