குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் எவரையும் அனுமதிக்க முடியாது - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

Published By: Digital Desk 7

11 Dec, 2024 | 09:54 AM
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் எவரையும் அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (10) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தருடன் முரண்பட்டு பணிப்பாளரைச் சந்திக்க வேண்டும் என வலுக்கட்டாயமாக உள்நுழைந்தார்.

வைத்தியசாலைக்குள் உள் நுழைந்தவர் பணிப்பாளரின் அறைக்குள் நுழைந்து தன்னை சேர் என அழைக்குமாறு கூறியுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் என்றே அழைக்க முடியும் சேர் என்று அழைக்க முடியாது என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும் தகாத வார்த்தைகளால் பேசிய அர்ச்சுனா பணிப்பாளர் பதவியில் இருந்து இடை நிறுத்துவேன் என்றும், பாராளுமன்றத்தில் வைத்து கேள்வி கேட்பேன் என்றும், வெளிநாட்டுக்கு தப்பி ஓடு என்றும், அச்சுறுத்தும் பாணியில் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவிலே 1500 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றை விட தாதியர்கள் உத்தியோகத்தர், ஏனைய சிகிச்சை பெறும் நோயாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை குழப்புவதற்கு யாரேனும் முயற்சித்தால் அவர்கள் வாசலில் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்

வடக்கு பகுதியிலே 2200 பேர் வரை பணிபுரியும் மிகப்பெரும் வைத்தியசாலையின் சேவையினை தனி நபர்கள் யாரேனும் குழப்புவதற்கு முயற்சித்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பான விடயம் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

கடந்த காலங்களிலே வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரால் மூன்று மாதங்கள் பயிற்சி நிறைவு பெற்று பணியாளர்களாக கடமை ஆற்ற விரும்புபவர்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் இங்கு தமது பயிற்சி நெறியை மேற்கொண்டார்கள்.

எனவே அவர்கள் மேற்கொண்ட பயிற்சி நெறி தொடர்பிலே சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பயிற்சி நெறியை மேற்கொண்டவர்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறோம் எனவே அவர்களை பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் அவர்கள் தான் முடிவெடுக்க முடியும்.

இவ்வாறான விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்கின்ற போது அவற்றை எம்மால் வழங்க முடியும். ஆனால் அவர்கள் அடாவடியில் ஈடுபடும் வகையிலோ, அச்சுறுத்தும் வகையிலோ அல்லது வைத்தியசாலையை குழப்பும் வகையிலோ செயல்பட்டால் நாங்கள் அவர்களை அனுமதிக்க முடியாது ஏனென்றால் இது மக்களுக்கு சிகிச்சை வழங்கும் நிலையம் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15