வர்த்தக ஹொக்கி சங்கத்தின் ஏற்பாட்டில் 46ஆவது வருடாந்த அணிக்கு எழுவர் கொண்ட ஹொக்கி போட்டி

Published By: Digital Desk 7

11 Dec, 2024 | 09:46 AM
image

(நெவில் அன்தனி)

வர்த்தக ஹொக்கி சங்கம் (MHA) ஏற்பாடு செய்துள்ள வர்த்தக அணிகளுக்கு இடையிலான 46ஆவது வருடாந்த அணிக்கு எழுவர் ஹொக்கி போட்டி பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் இம் மாதம் 15ஆம் திகதி காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.

வர்த்தக ஹொக்கி சங்கத்தின் நாட்காட்டியில் பிரதான போட்டியாக அமையும் வர்த்தக நிறுவன அணிகளுக்கு இடையிலான அணிக்கு எழுவர் ஹொக்கி போட்டியில் 19 நிறுவனங்களைச் செர்ந்த 27 அணிகள் 5 பிரிவுகளில் பங்குபற்றுகின்றன.

இந்த அணிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருப்பதுடன் அவர்களில் பல தேசிய ஹொக்கி வீரர்களும் அடங்குகின்றனர்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி லிமிட்டெட் அனுசரணை வழங்கும் டெனிஸ் டி ரொசைரோ கிண்ணத்திற்கான ஏ பிரிவில் நடப்பு சம்பியன் ஹட்டன் நெஷனல் வங்கி, ப்றவுண்ஸ் குறூப், மாஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி ஆகிய 4 அணிகள் பங்குபற்றுகின்றன.

சிங்கர் கிண்ணத்திற்கான பி பிரிவில் ஹெய்லீஸ், HSBC, செலான் வங்கி, ஜோன் கீல்ஸ்,CIAB, SLT மொபிடெல் ஆகிய 7 அணிகள் போட்டியிடுகின்றன.

வர்த்தக ஹொக்கி சங்க (MHA) கிண்ணத்திற்கான சி பிரிவில் சிங்கர், NTB, ஓரியன்ட் ஆகிய 3 அணிகளும் எட்மண்ட் ஜே. குறே கிண்ணத்திற்கான டி பிரிவில் DPMC>  சிலோன் டுபாக்கோ கம்பனி லிமிட்டெட், ஹேமாஸ் குறூப், ஏயார்போர்ட் ஏவியேஷன், இன்கியூப் சொலுஷன்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், பியூச்சர் லைவ் இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டெட் ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

இதேவேளை வர்த்தக ஹொக்கி சங்கத் தலைவர் கிண்ணத்திற்கான பிரிவில் கொமர்ஷல் வங்கி பி, சம்பத் வங்கி பி, ப்றவுண்ஸ் குறூப் பி, மாஸ் ஹோல்டிங்ஸ் பி, ஜோன் கீல்ஸ் பி, ஹட்டன் நெஷனல் வங்கி பி ஆகிய அணிகள் மோதுகின்றன.

சுற்றுப் போட்டியில் சிறந்த வீரர் விருது மற்றும் நேர்த்தியான விளையாட்டு விருது (Fair Play Trophy) என்பன வழங்கப்படும்.

இந்த வருடப் போட்டிக்கு ஹேலியொன் லங்கா நிறுவனத்தின் அயோடெக்ஸ் ஸ்ப்ரே பிரதான அனுசரணையையும் ப்றவுண்ஸ் குறூப்பின் பவ்வா பைட்ஸ் இணை அனுசரணையையும் வழங்குகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08