(நெவில் அன்தனி)
ஆறு தொழில்முறை அணிகள் பங்குபற்றம் அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்ப லீக் கிரிக்கெட் சுற்றப் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (11) ஆரம்பமாகவுள்ளது.
அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்ப லீக் கிரிக்கெட் போட்டியில் ஜெவ்னா டைட்டன்ஸ் (Jaffna Titans), ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் (Hambantota Bangla Tigers), நுவர எலிய கிங்ஸ் (Nuwara Eliya Kings) ஆகிய அணிகள் ஏ குழுவிலும் கலம்போ ஜகுவார்ஸ் (Colombo Jaguars), கண்டி போல்ட்ஸ் (Kandy Bolts), கோல் மாவல்ஸ் (Galle Marvels) ஆகிய அணிகள் பி குழுவிலும் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் அணிகள் அதே குழுக்களில் உள்ள அணிகளை ஒரு தடவையும் மற்றைய குழுவில் உள்ள ஒரு அணியை ஒரு தடவையயும் இரண்டு அணிகளை இரண்டு தடவைகளும் எதிர்த்தாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அணிகளின் தலைவர்களாக பிரபல வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெவ்னா டைட்டன்ஸ் அணியின் தலைவராக டேவிட் வைஸ், ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணியின் தலைவராக தசுன் ஷானக்க, நுவர எலிய கிங்ஸ் அணியின் தலைவராக சௌராப் திவாரி, கலம்போ ஜகுவார்ஸ் அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸ், கோல் மார்வல்ஸ் அணியின் தலைவராக மஹீஷ் தீக்ஷன, கண்டி போல்ட்ஸ் அணியின் தலைவராக திசர பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறவுள்ள கண்கவர் ஆரம்ப விழாவைத் தொடர்ந்து ஜெவ்னா டைட்டன்ஸ் அணிக்கும் ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணிக்கும் இடையிலான முதலாவது போட்டி பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் நுவர எலிய கிங்ஸ் அணியும் கலம்போ ஜகுவார்ஸ் அணியும்
இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 3ஆவது போட்டியில் கண்டி பொல்ட்ஸ் அணியை கோல் மார்வல்ஸ் அணி எதிர்த்தாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM