வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு !

11 Dec, 2024 | 06:58 AM
image

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி தொடர்ச்சியாக பயணம் செய்து அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு இன்று மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றிலும் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின்  பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24