(எம்.மனோசித்ரா)
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இன்னும் சில நாட்களில் அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தனது உயர்கல்வி தகைமை தொடர்பில் சபாநாயகர் விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார். அவரால் வெளியிடப்படும் அறிக்கைக்கு அமையவே அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும். வெளியான செய்திகள் உண்மையானாலும் போலியானவை என்றாலும் அவற்றுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பெறுபேறுகளின் அடிப்படையில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், கூற்றுக்கள் உண்மையாகவும் பொய்யானதாகவும் இருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகைமைகள் குறித்து பாராளுமன்ற இணையத்தளத்தில் ஆரம்பத்தில் 'கலாநிதி' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் முகநூலில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ரன்வல தனது கல்வித் தகையை நிரூபிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நிரூபிக்க தவறினால் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பாராளுமன்ற இணையதளத்தில் 'கலாநிதி' என்ற சொல் சபாநாயகரின் பெயருக்கு அருகிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM