இலங்கை சமூகங்களில் அமெரிக்காவின் 20 வருட முதலீட்டை கண்டி அமெரிக்கன் கோர்னர் ஊடாக கொண்டாடுதல்

10 Dec, 2024 | 06:26 PM
image

செழுமையான கலாசாரம் மற்றும் கல்வி ரீதியான உறவுகளின் இரு தசாப்தத்தை  கொண்டாடுவதன் நிமித்தம் இலங்கைலுள்ள அமெரிக்க தூதரகமும் மற்றும் கண்டி மாநகர சபையும் கண்டி அமெரிக்க கோர்னரின் (American Corner) 20 வருட நிறைவை இன்று செவ்வாய்க்கிழமை (10) சிறப்பித்தன.

இலங்கை முழுவதிலுமுள்ள ஐந்து அமெரிக்க ஸ்தானங்களின் (American Space) வலையமைப்பின் அங்கமொன்றான கண்டி அமெரிக்கன் கோர்னரின் முக்கியமான வகிபாகத்தை அமெரிக்க தூதுவர் ஜுலீ சங்கும் மற்றும் மத்திய மாகாணத்தின் பிரதி பிரதம செயலாளர் திலீபா பியதாசவும் சுட்டிக்காட்டினர்.

பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஆங்கில மொழி பயிற்சி மற்றும் தொழில்முனைவு செயலமர்வுகள் போன்ற இலவச நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கி கலாசார பரிமாற்றம், கற்றல் மற்றும் உரையாடல்களுக்கான மையங்களாக இந்த அமெரிக்க ஸ்தானங்கள் சேசையாற்றுகின்றன. 20 வருடங்களாக கண்டி அமெரிக்க கோர்னரானது, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு பாலமொன்றை நிர்மாணித்து கூட்டாண்மையின் ஒரு மைல்க்கல்லாக இருந்து வருகிறது.

கண்டியிலுள்ள அமெரிக்க கோர்னரின் 20 ஆவது ஆண்டு நிறைவையும் மற்றும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான, நீடித்த பங்காண்மையையும் நாம் இன்று கொண்டாடுகிறோம்,' என்று தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.

'இந்த அமெரிக்க கோர்னரானது, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆயிரங்கணக்கான இலங்கையர்களை, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களை, இலவச கல்வி, தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் ஜனநாயகம், அனைத்து தரப்பினரையும் உள்வாங்குதல் மற்றும் வாய்ப்புகள் போன்ற எமது பொதுவான விழுமியங்களில் வேரூன்றிய நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக வலுவூட்டியுள்ளது.

ஒதுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் செழிப்படைய கருவிகளை கொண்டிருக்கக் கூடிய எதிர்காலமொன்றை நாம் நிர்மாணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மைல்க்கல்லானது, கூட்டாண்மையுடாக நாம் அடையக்கூடிய அளப்பரிய தாக்கங்களை பிரதிபலிப்பதுடன், இலங்கை மக்களுடனான இந்த பயணத்தை தொடர்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்,' என்றும் அவர் குறிப்பிட்டார்.  

'கண்டி மாநகர சபைக்கும் அமெரிக்க தூதரகத்துக்கும் இடையிலான நீடித்த கூட்டாண்மையானது வாய்ப்புகளை வழங்கியதுடன், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தி எமது மாவட்டத்திற்கு இந்த வளங்களை வழங்கியமைக்காக அமெரிக்க தூதரகத்திற்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த உறவை சிறந்த முறையில் எதிர்காலத்திலும் தொடர்வதற்கு எதிர்ப்பார்க்கிறோம்,' என்று மத்திய மாகாணத்தின் பிரதி பிரதம செயலாளர் திலீபா பியதாச இந்த பங்காண்மைக்கு நன்றி தெரிவித்தார்.

'கண்டியிலுள்ள அமெரிக்க கோர்னர் உட்பட எமது அமெரிக்க ஸ்தானங்கள் வலையமைப்பானது இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது,' என்று அமெரிக்க தூதரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரியான ஹய்டி ஹட்டன்பேக் தெரிவித்தார்.

'இளைஞர் வலுவூட்டல், கல்வி மற்றும் வளர்ச்சிக்கான தலைமைத்துவ வாய்ப்புகளில் தசாப்த காலமாக நாம் முதலீடு செய்துள்ளளோம்.

சமூகங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக சேவையாற்றியும் கூட்டாண்மை, புரிந்துணர்வு மற்றும் முன்னேற்றத்தை செழிப்பாக்கியும் இந்த பங்காண்மையின் பிரகாசமான உதாரணமொன்றாக கண்டியிலுள்ள இந்த அமெரிக்கன் கோர்னர் அமைந்துள்ளது.

நாம் மக்களிலும் பொதுவான விழுமியங்களிலும் முதலீடு செய்யும் போது எவற்றையெல்லாம் அடையும் முடியும் என்பதற்கு இதுவொரு சான்றுபகிர்வாகும்,' என்றும் அவர் குறிப்பிட்டார். 

2005 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டதிலிருந்து, கண்டி அமெரிக்கன் கோர்னரானது, இலங்கையின் மத்திய மாகாணத்தில் கலாசார மற்றும் கல்வி பரிமாற்றங்களுக்கான வரவேற்பு மையமொன்றாக இருந்து வருகிறது.

டீ.எஸ் சேனாநாயக்க ஞாபகார்த்த பொது நூலகத்தில் அமைந்துள்ள கண்டி அமெரிக்கன் கோர்னரானது, அமெரிக்காவைப் பற்றிய தகவல்கள், கலாசார செயற்பாடுகள், கல்வி ஆலோசனைகள், ஆங்கில மொழிக் கல்வி, முன்னாள் மாணவர் ஈடுபாடுகள் மற்றும் திறன் அபிவிருத்தி ஆகிய ஆறு மைய விடயப்பரப்புகளில் அவதானம் செலுத்தி இலவச நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகிறது.

ஆங்கில மொழி பயிற்சி, STEAM கல்வி, இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் பெண்களின் தொழில்முனைவு போன்ற நிகழ்ச்சித்திட்டங்களானவை, பங்கேற்போருக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய உலகத்துக்கான பெறுமதிவாய்ந்த திறன்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக கண்டி அமெரிக்கன் கோர்னரானது ஏறக்குறைய 200,000 வருகையாளர்களை வரவேற்றுள்ளதுடன், 4 ஆயிரம் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தியுள்ளது. அவற்றில் 7 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் அதன் முன்னெடுப்புகளை பூர்த்திசெய்துள்ளனர்.

இந்த முயற்சிகளானது, கற்றல் மற்றும் கூட்டாண்மையின் பொதுவான விழுமியங்களின் அடிப்படையில் அமைந்த இலங்கைக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான வலுவானதொரு பங்காண்மையை பிரதிபலிக்கின்றன. 

உங்களையும் வருகை தருமாறும், உங்களது கருத்தை பகிர்ந்துகொள்ளுமாறும் மற்றும் அமெரிக்கா பற்றிய கற்றலுக்கான எண்ணங்களை ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுமாறும் கண்டி அமெரிக்கன் கோர்னர் உங்களையும் ஊக்குவிக்கிறது. தொடர்புகளை செழுமைப்படுத்தியும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும்  இடையிலான பங்காண்மையை வலுப்படுத்தும் வாய்ப்புகளை வழங்கியும் இந்த சமூகத்துக்கு சேவை புரிவதற்கே நாம் இங்கு இருக்கிறோம். 

அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க ஸ்தானங்களின் வலையமைப்பு பற்றி: கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருப்பவைகளுடன் கண்டி அமெரிக்கன் கோர்னரும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க ஸ்தானங்களின் அங்கமொன்றாகும்.

வருகை தருபவர்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் விரிவுரைகள் ஊடாகவும் அதேபோல், புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சஞ்சிகைகள் மூலமாகவும் அமெரிக்கவைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் மற்றும் தொடர்பொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இந்த அமெரிக்க ஸ்தானங்கள் வரவேற்புடன் கூடிய சூழலொன்றை வழங்குகின்றன.

இந்த அமெரிக்க ஸ்தானங்கள், பொது மற்றும் உலகளாவிய நலன் சார்ந்த விவகாரங்கள் சம்பந்தாக செயலாற்றுவதற்கு அனைத்து தரப்பு இலங்கை மக்களும் ஒன்றிணைவதற்கு அறிவுப் பகிர்வு மற்றும் கூட்டண்மையின் தளங்களாக விளங்குகின்றன. விரிவான வளங்கள் மற்றும் துடிப்பான சமூக ஈடுபாடுகளுக்கான அணுகல் ஊடாக கல்வி வளர்ச்சி, கலாசார பரிமாற்றம் மற்றும் சமூக அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கு இந்த அமெரிக்க ஸ்தானங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஸ்தானங்கள் பரந்த அளவிலான ஊடாடும் நிகழ்ச்சிகளை மெய்நிகராகவும் நேரடியாகவும் ஏற்பாடு செய்கிறது. ஆங்கில மொழி செயலமர்வுகள், தொழில்முனைவோர் வழிகாட்டல் , அமெரிக்க உயர்கல்வி குறித்த அமர்வுகள் அல்லது முழு அளவிலான அமெரிக்கக் கொள்கை, சமூகம் மற்றும் கலாச்சாரம், திரைப்படத் திரையிடல்கள் மற்றும் கதை சொல்லும் அமர்வுகள் பற்றிய கலந்துரையாடல்கள் என அனைவருக்கும் ஏதாவது ஒன்று இங்கு இருக்கிறது.

2023 ஆம் ஆண்டில் அமெரிக்க நிலையங்கள் (American Center), அமெரிக்கன் கோர்னர்கள் மற்றும் இருநாட்டு நிலையங்களை (Binational Center) உள்ளடக்கிய உலகளாவிய அமெரிக்க ஸ்தானங்கள் வலையமைப்பானது (Global American Spaces network) கிட்டத்தட்ட 1.5 மில்லியன் செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் ஊடாக உலகளவில் 41 மில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17