அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கையிட நடவடிக்கை - பொலிஸ்

10 Dec, 2024 | 06:31 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அளித்த முறைப்பாடு தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வீரகேசரிக்கு தகவல் அளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு இந்த விசாரணைகள் தொடர்பில் முதல் தகவல் அறிக்கை ( பீ அறிக்கை) சமர்ப்பிக்கவும் யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை (9) முற்பகல் யாழ். பொலிஸ் நிலையம் சென்றுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்திய மூர்த்தி, நேற்றைய தினம் காலை வேளையில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் அலுவலகத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அத்துமீறி நுழைந்து தன்னை திட்டி, அச்சுறுத்தியதாக' முறைப்பாடளித்துள்ளார்.

வைத்தியசாலையின் ஊழியர்களை மையப்ப‌டுத்திய நிர்வாக நடவடிக்கை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. தகவல்களை கோரிய போது அவற்றை வழங்க பணிப்பாளர் மறுத்துள்ள நிலையிலேயே, அவரை திட்டி இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள‌தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே  வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.சி.ஏ. தனபாலவின் உத்தரவில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயசிங்கவின்  ஆலோசனைக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயமஹவின் நேரடி கட்டுப்பாட்டில், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவின் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து...

2025-01-24 22:22:24
news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51