சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட தேவையுடைய பணியாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஆய்வறிக்கைகள் வெளியீடு - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

10 Dec, 2024 | 06:33 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களின் உரிமைகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் அரச துறையில் பணிபுரியும் விசேட தேவையுடையோரின் உரிமைகள் என்பன தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளுடன் கூடிய ஆவணம் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச மனித உரிமைகள் தினமான செவ்வாய்க்கிழமை  (10) அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் அறிமுகப்படுத்தப்பட்டு 76 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை நினைவுகூரும் விதமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனிய, டிசம்பர் 10 ஆம் திகதி என்பது சகலரதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலக்காகக்கொண்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டமையை நினைவுகூருவதற்கான தினம் மாத்திரமல்ல. மாறாக அது சமகால மனித உரிமைகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும், அவற்றை வலுப்படுத்துவதற்குமான தினமாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஒரு மனிதன் சுயகௌரவத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு அவசியமான மனித உரிமைகள், இன, மத, கலாச்சார, மொழி, பால், பிரதேச பேதங்கள் எவையுமின்றி சகலராலும் அனுபவிக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது மனிதாபிமானத்தைக் காப்பதற்கு ஈடானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் வலியுறுத்தினார்.

அதேவேளை கடந்த காலங்களில் நாட்டில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல், பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்படல், சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி சுருங்குதல், பொலிஸ் தடுப்புக்காவலின்கீழ் இடம்பெறும் மரணங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீவிர மனித உரிமைகள் சார்பில் கரிசனைகள் நிலவுவதாக சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக பெண்கள் மற்றும் பால்புதுமையின சமூகத்தினர் போன்ற வலுவற்ற தரப்பினரின் உரிமைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் பேராசிரியர் தீபிகா உடகம ஆகியோரின் விசேட உரைகளும் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க மற்றும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை தொடர்பான ஆய்வறிக்கை, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளும், பொது வழிகாட்டல்களும் அடங்கிய அறிக்கை மற்றும் அரச துறையில் பணியாற்றும் விசேட தேவையுடையோர் தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை ஆகிய மூன்று ஆவணங்களும் வெளியிடப்பட்டதுடன், அவற்றின் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் பர்ஸானா ஹனீஃபா, கலாநிதி கெஹான் குணதிலக மற்றும் நிமல் புஞ்சிஹேவா ஆகியோர் விளக்கமளித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00