இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை ஓரிரு நாட்களுக்குள் நாட்டை வந்தடையும். நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அமைவாகவே அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைவாகவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அத்துடன் அரிசி இறக்குமதியாளர்களும் இந்த கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாகவே விநியோக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை ஓரிரு நாட்களுக்குள் நாட்டை வந்தடையும், துறைமுகத்தில் இருந்து ஓரிரு மணித்தியாலங்களுக்குள் அரிசி தொகையை விடுவிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என வர்த்தக, வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அடங்கிய கப்பல் அரிசி கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அரிசி இறக்குமதிக்கான வரையறைகளையும் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இதற்கமைய சிறிய துறைமுகங்களில் இருந்து பல இறக்குமதியாளர்களால் கொள்வனவு செய்யப்பட்ட செய்யப்பட்ட 20,000 மெட்ரிக் தொன் அரிசி வியாழக்கிழமை (13) முன்னர் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ள மேலும் 20000 மெற்றிக் தொன் அரிசி நத்தார் பண்டிகைக்கு முன்னதாக கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அரிசி இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பில் நாடு உட்பட பல்வேறு வகையான அரிசிகள் உள்ளடங்குவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM