(இராஜதுரை ஹஷான்)
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடளிக்கலாம் என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
நுகர்வோர் அதிகார சபையின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி ஆலைகளை சோதனை செய்யும் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தியுள்ளோம். அரிசி உற்பத்தியாளர்கள் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாகவே மொத்த மற்றும் சில்லறை விலையில் அரிசி விற்பனை செய்யப்பட வேண்டும். கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரிசி உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின் அது குறித்து பொதுமக்கள் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடளிக்க முடியும். தேங்காய்க்கான தட்டுப்பாடு தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில் அளவுக்கு அதிகமாக உணவு பொருட்களை கொள்வனவு செய்வதை நுகர்வோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வழமைக்கு மாறாக அதிகளவில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு இயல்பாகவே தட்டுப்பாடு ஏற்படும்.
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சந்தேகிக்கப்பட்டால் அது குறித்த விபரங்களை மாவட்ட மட்டத்தில் உள்ள நுகர்வோர் அதிகார சபையிடமும் அல்லது அதிகார சபைக்கும் அறிவிக்கலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM