மாநிலங்களவை தலைவர்ஜக்தீப் தன்கருக்கு எதிராகஇந்திய எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

10 Dec, 2024 | 04:40 PM
image

மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இந்திய எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா  தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் கடந்த 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்ந சூழலில் நடப்பு கூட்டத்தொடரில் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது.

அதானி முறைகேட்டை அவையில் எழுப்ப எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜக்தீப் தன்கர் மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேசமயம் ஜக்தீப் தன்கர் நேற்று (டிச.9) அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளுங்கட்சி எம்.பி-களுக்கு அனுமதி அளித்தார். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது.

இதனால் ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. அவரை பதவியை விட்டு நீக்க தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.

காங்கிரஸ் திரிணாமூல் காங்கிரஸ் ஆம் ஆத்மி சமாஜ்வாடி திமுக ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் போதிய எண்ணிக்கை இல்லாததால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்று கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர்...

2025-01-24 15:44:18
news-image

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்...

2025-01-24 13:46:19
news-image

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை...

2025-01-24 12:35:08
news-image

'வாழ்நாள் அனுபவம்" டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு...

2025-01-24 11:44:55
news-image

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா...

2025-01-24 10:52:02
news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00
news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55