கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகை வெளியீடு

Published By: Digital Desk 7

10 Dec, 2024 | 06:40 PM
image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு சிறப்பிதழாக அமைந்த கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு விழா இன்று (10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியும் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் செல்வ அம்பிகை நந்தகுமரனும் கௌரவ விருந்தினராக கல்விக் காருண்யன் ஈஎஸ்பி நாகரத்தினம், கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ. கருணலிங்கம், கலாசாலை சிவன் ஆலயப் பிரதம குரு சிவசிறி பா. செல்வசேனக்குருக்கள், டாக்டர் க. ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

கலாசாலையின் பிரதி அதிபர் த. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரையையும் மலராசிரியர் கு. பாலஷண்முகன் வெளியீட்டுரையையும் விரிவுரையாளர் சி. மனோகரன் நன்றியுரையையும் ஆற்றினர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் சிவன் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்று கல்வியங்காடு சுதா ரஜீவன் குழுவினரின் மங்கல இசையுடன் வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றது. விசேட கல்வி நெறி ஆசிரிய மாணவி முகமட் அன்சார் அஸ்மிலா பேகம் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17