புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா?

10 Dec, 2024 | 06:40 PM
image

(எம்.மனோசித்ரா)

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவை நியமிக்க உத்தியோகபூர்வமாக பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. எவ்வாறிருப்பினும் இந்த நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த முடிவு குறித்து கட்சியால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவிக்காமலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியில் மூவர் வெற்றி பெற்றதோடு, இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன. கடந்த நவம்பரில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் ஒருவராக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த தீர்மானம் கட்சிக்கு அறிவிக்கப்படாமல் புதிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளரால் தன்னிச்சையாகவே எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டதோடு, விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ரவி கருணாநாயக்க மற்றும் தலதா அத்துகோரள போன்ற அனுபவமிக்க அரசியல் தலைவர்கள் உட்பட பல குறிப்பிடத்தக்க பெயர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்தன. எனினும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக முன்வைக்கப்பட்ட நிலையில் பைசர் முஸ்தபாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை...

2025-01-23 17:46:04
news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-23 17:44:43
news-image

கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்...

2025-01-24 09:05:29
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48