மாதங்களில் கார்த்திகை மாதம் சிவ வழிபாட்டிற்கு உரிய மாதம். இந்த மாதத்தில் வரும் கார்த்திகை நாளன்று சிவபெருமான் ஜோதி ரூபமாக தரிசனம் அளித்த நாள். இதனால் இம்மாதம் முழுவதும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களது வீட்டில் தீபமேற்றி வழிபாட்டை மேற்கொள்வார்கள்.
நடைமுறை சிக்கல்கள் மற்றும் பல்வேறு அசௌகரியங்களால் எம்மில் பலருக்கும் நாளாந்தம் தீபம் ஏற்றி வழிபட முடிவதில்லை. இதனால் எம்முடைய முன்னோர்கள் இம்மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று ஏற்றப்படும் தீபத்தை விசேடமாக ஏற்றி வழிபட்டால் உங்களுக்கு பரிபூரண பலன் கிடைக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் மண்ணாலான புதிய அகல் விளக்கு (27), நல்லெண்ணெய் அல்லது நெய், திரி, பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலக்காய், வெள்ளருக்கு வேர்.
கார்த்திகை தீபத் திருநாள்- இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று வருகிறது. இதனால் தீபம் ஏற்றி வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைப்பது உறுதியாகிறது. அன்று மாலை அபிஜித் முகூர்த்த தருணத்தில் வீட்டின் பூஜையறை ,வரவேற்பறை ,நிலை வாசல் , படுக்கையறை, மொட்டை மாடி, சுற்றுச்சுவர் , என பல்வேறு இடங்களிலும் எண்ணிலடங்காத வகையில் தீபமேற்றி தீபத்திருநாளை கொண்டாடலாம்.
இருப்பினும் சுப பலன்கள் கிடைப்பதற்கு மாலை வேளையில் வாசல் மற்றும் பூஜை அறை ஆகிய இரண்டையும் இணைத்து மொத்தம் 27 மண்ணாலான புதிய அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, அதனுடன் சிறிதளவு வெள்ளருக்கு வேர், ஒரு கிராம்பு ,ஒரு ஏலக்காய் ,சிறிதளவு பச்சை கற்பூரம் , ஆகியவற்றை கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.
இப்படி 27 அகல் விளக்குகளிலும் செய்யலாம் அல்லது ஒரே ஒரு விளக்கில் மட்டும் இதனை மேற்கொள்ளலாம். இப்படி செய்து மகாலட்சுமியையும், சிவபெருமானையும் மனதுள் ஒருமுக சிந்தனையுடன் வணங்கினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சுப பலன்கள் அனைத்தும் விரைவில் கிடைக்கும்.
இந்த பிரத்யேக தீப வழிபாட்டை கார்த்திகை நாளன்று மேற்கொள்வது உத்தமம். கார்த்திகை மாதம் முழுவதும் இதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும் இதனை கார்த்திகை தீபத்திற்கு பிறகு தொடர்ச்சியாக கார்த்திகை மாதம் முழுவதும் மேலே கூறியபடி பிரத்யேகமான முறையில் தீபமேற்றி சிவபெருமானை வழிபட்டால் உங்களுக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கும் என்பது உறுதி.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM