எம்மில் பலரும் வீட்டில் நாய் போன்ற செல்லப்பிராணியை வளர்க்கிறோம். வேறு சிலர் ஆடுகளை வளர்கிறார்கள். இவர்களில் சிலருக்கு திடீரென்று அடிவயிற்று வலி அல்லது விவரிக்க இயலாத உடல் சுகவீனம் ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து கொண்ட பின்னர் மருத்துவர்கள் ஹைடாடிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என விவரிப்பார்கள். ஹைடாடிட் நோய் என்பது கல்லீரலில் ஏற்படும் நீர்க்கட்டி பாதிப்பாகும். இதற்கு உடனடியாக முறையான சிகிச்சையை பெறாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஹைடாடிட் நோய் என்பது நாடாப் புழுவின் முட்டைகளால் ஏற்படும் ஒட்டுண்ணி தொற்று பாதிப்பாகும். இதனை மருத்துவ மொழியில் சிஸ்டிக் எக்கினோகோகோசிஸ் என்றும் குறிப்பிடுவர். இத்தகைய நாடாப் புழுக்கள் பொதுவாக நாய், செம்மறி ஆடு போன்ற உயிரினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன. இத்தகைய ஒட்டுண்ணிகள் ஏதேனும் ஒரு காரணத்தால் மனிதர்களின் உடலுக்குள் சென்று விட்டால் அவை கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளில் நீர்க் கட்டிகளை உருவாக்குகிறது. இன்னும் விளக்கமாக விவரிக்க வேண்டும் என்றால் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை பசியாறினால் அந்த ஒட்டுண்ணி மனிதர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஹைடாடிட் நோய் தொற்றுநோய் பாதிப்பு அல்ல என்றாலும், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். குருதியுடன் கூடிய மலம், குமட்டல் ,வாந்தி ,மூச்சுத் திணறல், திடீரென்று எடை இழப்பு ,மஞ்சள் காமாலை ,வயிறு அல்லது மார்பில் அசௌகரிய உணர்வு ,இருமல் ,போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை சந்திக்க வேண்டும்.
வைத்தியர்கள் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை பரிந்துரைப்பர். இதன் மூலம் உங்களுடைய கல்லீரல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் நீர்க்கட்டி பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.
இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி முதன்மையான நிவாரணத்தை தருவர். சிலருக்கு இத்தகைய நீர்க் கட்டிகளின் அளவு இயல்பானதை விட கூடுதலாக இருந்தால், மேலும் சில பரிசோதனைகளை செய்து சத்திர சிகிச்சை மூலம் அகற்றி நிவாரணம் வழங்குவர். சிகிச்சைக்குப் பிறகு இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாத வண்ணம் தற்காத்துக் கொள்ளும் வகையில் சில வாழ்க்கை நடைமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும் வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
வைத்தியர் குரு சங்கர்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM