நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின் 'திரு. மாணிக்கம்' பட முன்னோட்டம்

Published By: Digital Desk 2

10 Dec, 2024 | 06:41 PM
image

தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'திரு. மாணிக்கம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'லக்கி பாஸ்கர்'  படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பான் இந்திய நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு,  சமுத்திரக்கனிக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'திரு. மாணிக்கம் 'எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர் ,சின்னி ஜெயந்த் ,வடிவுக்கரசி ,கருணாகரன், சுலீல் குமார், கிரேஸி, சந்துரு , சாம்ஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை ஜிபி ஆர் கே சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி பி ரேகா ரவிக்குமார் , சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி , ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இம்மாதம் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மலையும் மலை சார்ந்த பகுதியில் வாழும் மாணிக்கம் எனும் தனி மனிதரின் வாழ்வியல் சார்ந்த படைப்பாக உருவாகி இருப்பதாலும் காட்சிகள் உணர்வுபூர்வமாகவும், மனித நேயத்தை மையமாகக் கொண்டிருப்பதாலும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22
news-image

புதுமுக நடிகர் ஜெக வீர் நடிக்கும்...

2025-01-23 15:03:08
news-image

'விடுதலை' பட நாயகி பவானி ஸ்ரீ...

2025-01-22 17:02:31
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25