தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து தற்போது பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் இந்திய மதிப்பில் 829 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான 'புஷ்பா 2' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் -ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியானது. படத்தைப் பற்றிய கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் வசூல் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் 294 கோடி ரூபாயும், இரண்டாவது நாள் 449 கோடி ரூபாயும், மூன்றாவது நாள் 621 கோடி ரூபாயும், நான்காவது நாள் 829 கோடி ரூபாயும் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படமும் நிகழ்த்தாத புதிய சாதனைகளையும் படைத்திருக்கிறது. அதாவது 500 கோடி ரூபாயை விரைவாக வசூலித்த திரைப்படம் 800 கோடி ரூபாயை விரைவாக வசூலித்த இந்திய திரைப்படம் இந்தி திரையுலகில் ஒரே நாளில் 86 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படம் என பல சாதனைகளையும் படைத்திருக்கிறது.
இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து, விரைவாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படத்தின் வசூல் - தயாரிப்பாளர்களையும், படைப்பாளிகளையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM