இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' படையாண்ட மாவீரா ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான வ.கௌதமன் இயக்கத்தில் உருவாகி வரும் ' படையாண்ட மாவீரா ' எனும் திரைப்படத்தில் கௌதமன், பூஜிதா, சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி , நிழல்கள் ரவி, இளவரசு, தமிழ் , தலைவாசல் விஜய், ஏ எல் அழகப்பன், மன்சூர் அலிகான், ஆடுகளம் நரேன், பாகுபலி பிரபாகர், வேதாளம் கபீர், மதுசூதன் ராவ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரன் மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் இணைந்து ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மண்ணின் மைந்தர்களை பற்றி வீரம் செறிந்த வரலாறை பதிவு செய்யும் நோக்கத்தில் வீரியமிக்க படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விகே புரொடக்ஷன்ஸ் குழுமம் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' சந்தனக் காடு, முந்திரி காடு, வன்னி காடு , ஆகிய காடுகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை படைப்பாக்கி மக்களுக்கு வழங்குவது தான் எம்முடைய நோக்கம். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முழுமையாக நிறைவடைந்த உடன் படத்தின் டீசர் வெளியாகும்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM