விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா மந்தானாவின் ' தி கேர்ள் பிரண்ட் ' பட கிளர்வோட்டம்

Published By: Digital Desk 2

10 Dec, 2024 | 02:10 PM
image

'புஷ்பா 2 'படத்தின் மூலம் சர்வதேச அளவில் திரை ஆர்வலர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் நட்சத்திர நடிகை ராஷ்மிகா மந்தானா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'தி கேர்ள் பிரண்ட்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை அவரது அன்பிற்குரியவரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் தேவரகொண்டா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு, ராஷ்மிகா மந்தானாவிற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கேர்ள் பிரண்ட்' எனும் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். காதல் கதையாக உருவாகி இருக்கும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்குகிறார்.

கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் 'தி கேர்ள் பிரண்ட்' எனும் திரைப்படத்தின் டீசரில் ராஷ்மிகா அழகாக இருக்கிறார்.. இளமையாக இருக்கிறார் கவர்ச்சியாக தோன்றுகிறார். பின்னணியில் காதல் கவிதை ஒன்றும் ஒலிப்பதால் இளைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22
news-image

புதுமுக நடிகர் ஜெக வீர் நடிக்கும்...

2025-01-23 15:03:08
news-image

'விடுதலை' பட நாயகி பவானி ஸ்ரீ...

2025-01-22 17:02:31
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25