நுகேகொடை பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர் காணி ஒன்றை விற்பனை செய்வதற்காக சமூக ஊடகங்களில் விளம்பரம் ஒன்றைப் பதிவிட்டுள்ள நிலையில் சந்தேக நபர் அந்த காணியைக் கொள்வனவு செய்யும் போர்வையில் முறைப்பாட்டாளரிடமிருந்து வங்கிக் கணக்கைப் பெற்றுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மேலும் சில நபர்களுடன் இணைந்து முறைப்பாட்டாளரின் வங்கி கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபா பணத்தைத் திருடியுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM