நடிகர்கள் அஜய் மற்றும் 'முருகா' அசோக் கதையின் நாயகர்களாக நடிக்கும் 'சதுரங்க ஆட்டம் ஆரம்பம்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குனர் பேரரசு சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் எம். வி. ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'சதுரங்க ஆட்டம் ஆரம்பம்' எனும் திரைப்படத்தில் அஜய், 'முருகா' அசோக், சோனியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
டேனியல் ஜே. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி. பாலசுப்ரமணியம் இசையமைக்கிறார்.
சதுரங்க ஆட்டத்தை மையப்படுத்தி திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வினோத் வி. சர்மா தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் எம். வி. ராமச்சந்திரன் பேசுகையில், '' கடந்த தசாப்தங்களில் விளையாடிய சதுரங்க ஆட்டத்திற்கும், தற்போதைய சதுரங்க ஆட்டத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது. சதுரங்க ஆட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்திருக்கிறோம். இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM