பக்தி பாடல்களுக்கு முதல் முறையாக இசையமைத்த வித்யாசாகர்

10 Dec, 2024 | 11:58 AM
image

'சீதா' எனும் திரைப்படத்தின் மூலம் 1990 ஆம் ஆண்டில் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக கலை பயணத்தை தொடங்கிய இசையமைப்பாளர் வித்யாசாகர் - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் 225 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். 

இவர் முதன்முதலாக ' அஷ்ட ஐயப்ப அவதாரம்' எனும் பெயரில் தயாராகி இருக்கும் பக்தி இசை அல்பத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த ஆன்மீக இசை அல்பம் சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடெட் எனும் நிறுவனம் சார்பில் சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் முரளி கிருஷ்ணன் தயாரிப்பில் சரிகம நிறுவனம் வழங்கியிருக்கும் இசை அல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'. இந்த அல்பத்தில் பத்து பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. 

இந்த பாடல்களை பின்னணி பாடகர்கள் வித்யாசாகர் -விஜய் பிரகாஷ் - கே. எஸ். சித்ரா-  சங்கர் மகாதேவன் - புஷ்பவனம் குப்புசாமி - மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாடியிருக்கிறார்கள்.

இந்த அல்பத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல்களை பாடலாசிரியர்கள் பா. விஜய் - டொக்டர் கிருத்தியா - வாலி- நெல்லை ஜெயந்தா - கே. பி. வித்யாதரன் - முரளி கிருஷ்ணன்- திருப்புகழ் மதிவண்ணன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

இந்த பத்து பாடல்களில் நான்கு பாடல்களுக்கு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது சுவாமி ஐயப்பனின் மண்டல பூஜை திருவிழா நாள் என்பதால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் கவனத்தை இந்த இசை அல்பம் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்