முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி !

Published By: Digital Desk 7

10 Dec, 2024 | 04:17 PM
image

"மீனவ சமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்" என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த நடைபவனியானது, முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபம் வரை இடம்பெற்றது.

குறித்த நடைபவனியில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்திய இழுவைமடி ஆக்கிரமிப்பை நிறுத்துதல், மீனவசட்டத்தை உடன் அமுல்படுத்துதல், சட்டவீரோத மீன்பிடிச் செயற்பாடுகளை முற்றாக தடைசெய்தல், கனிய மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பண்ணை வளர்ப்புத் திட்டங்களை நிறுத்துதல், காற்றாலை மின்சாரத் திட்டத்தைத் தடை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளைத் தாங்கியவாறு நடைபவனியில் ஈடுபட்டனர்.

வன்னிபாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதகள், மீனவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் உலக மீனவதின நிகழ்வுகள் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள...

2025-01-24 16:14:14
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக...

2025-01-24 16:53:17
news-image

புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து...

2025-01-24 22:22:24
news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16