புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நுரைச்சோலை ஆண்டாங்கன்னி பகுதியில் நேற்று திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவது ,
பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக வீழ்ந்துள்ள நிலையில் பின்னால் வந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM