உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை – ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு

Published By: Rajeeban

10 Dec, 2024 | 06:19 AM
image

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும்  குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஊழலிற்கு எதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு உலகில் ஊழல் .மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கின்றது.

குறிப்பிடத்தக்க ஊழல் ,பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என 14 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அமெரிக்கா இது தொடர்பிலான பட்டியலில் இணைத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் பிரிவு 7031 சியின் படி இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள்.

மேலும் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் பல கொள்கைகளிற்கு இணங்க மேலும் பலரிற்கு விசா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்கா ஆராய்கின்றது.

கபில சந்திரசேன - ஸ்ரீலங்கன்  எயர்லைன்சின் முன்னாள் பிரதமநிறைவேற்றதிகாரி

7031 சி பிரிவின் அடிப்படையில் கபிலசந்திரசேன ஊழலில் ஈடுபட்டார் என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்து அவரை குறிப்பிட்ட பட்டியலில் இணைக்கின்றது.

ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதமநிறைவேற்றதிகாரியாக பணியாற்றியவேளை இலங்கை ,எயர்பஸ்ஸினை  அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக இவர் இலஞ்சம் பெற்றார்.

இந்த செயற்பாட்டிற்காக இவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டு அவர்களிற்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்கவீரதுங்க

7031 சி பிரிவின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க அளவு  ஊழலில் உதயங்க வீரதுங்க ஈடுபட்டார் என அமெரிக்கா அறிவித்து குறிப்பிட்ட பட்டியலில் இணைக்கின்றது.

இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது உதயங்க வீரதுங்க ஊழல் நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்து அதனால் நன்மையடைந்தார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிற்கும் பயணத்தடை விதிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தியோகபூர்வமாக அறிவித்த மறுகணமே மஹிந்த ராஜபக்ஷ...

2025-01-24 17:20:51
news-image

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள...

2025-01-24 16:14:14
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக...

2025-01-24 16:53:17
news-image

புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து...

2025-01-24 22:22:24
news-image

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்...

2025-01-24 16:17:53
news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17