அம்பலாந்தொட்ட - மாமடல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை நேற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்களை சமாதிகம பகுதியில் வைத்து  தங்காலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் லுனம பிரதேசத்தைச் சேர்ந்த 28 தொடக்கம்  49 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி எலேகொட பகுதியில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் தூப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டனர்.

இதில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.