(நா.தனுஜா)
சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தரிந்து உடுவரகெதர வலியுறுத்தியுள்ளார்.
அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியினால் திங்கட்கிழமை (9) கொழும்பு லயன்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
அரிசி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிரடித் தீர்மானங்களை மேற்கொள்வதைப் பார்த்தோம். ஆனால் சந்தையில் அரிசி இல்லை. இருக்கின்ற அரிசியின் அளவு போதுமானதாக இல்லை தற்போது அரிசி தட்டுப்பாட்டுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கடந்த ஆண்டுகளில் நாம் தேவையை விட அதிகமாக அரிசியை உற்பத்தி செய்திருக்கிறோம். அவ்வாறிருக்கையில் இப்போது அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
பேரளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசியைத் திட்டமிட்டுப் பதுக்கியிருக்கிறார்கள். அதனூடாக அவர்கள் அதிக இலாபமீட்டுவதற்கு முனைகிறார்கள். இலங்கையின் நுகர்வோர் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் பொருட்களை விற்பனை செய்யாமல் பதுக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் தற்போது இச்சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆகையிலேயே உற்பத்தியாளர்கள் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இப்போது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு அமைவாக அரிசி உற்பத்தியாளர்கள் ஒரு கிலோ அரிசி விற்பனையின் ஊடாக 50 ரூபாவுக்கும் மேல் வருமானமீட்டுகிறார்கள். அவ்வாறிருக்கையில் டட்லி சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறுகிறார்.
இந்நிலையில் அதிகாரிகள் ஊடாக அரிசி ஆலைகளில் சோதனை நடாத்தவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற வேடிக்கை நடவடிக்கைகள் அவசியமற்றவை. மாறாக மந்தபோசணை உயர்வாகக் காணப்படும் இலங்கையில், இனினும் அரிசி உற்பத்தியை வியாபாரமாக மாற்ற இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM