நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு செலவு குறைவு; மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுகின்றனர் - நளின் பண்டார சாடல்

Published By: Vishnu

10 Dec, 2024 | 02:07 AM
image

(எம்.மனோசித்ரா)

நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது. இலங்கையின் மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

திங்கட்கிழமை (9) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வருடத்துக்கு இரு திருத்தங்கள் எனக் காணப்பட்ட முறைமை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் 4 ஆக அதிகரிக்கப்பட்டது. ஒக்டோபரில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. எனினும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஜனவரியில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது.

கடந்த மார்ச்சில் 4 சதவீதம் மாத்திரமே மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்று இலங்கை மின்சாரசபை கூறிய போது, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலையிட்டு 21 சதவீத கட்டண குறைப்பினை பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது. ஜூலையிம் மின்சாரசபை 4 சதவீதம் எனக் கூறிய போதிலும், 22.9 சதவீத கட்டண குறைப்பினை மேற்கொள்வதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.

தற்போது 65 சதவீதம் நீர் மின் உற்பத்தியே இடம்பெறுகிறது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஊடாக 17 சதவீத மின் உற்பத்தி இடம்பெறுகிறது. நிலக்கரி உள்ளிட்ட செலவு குறைந்த முறைமை ஊடாக குறிப்பிட்டளவு மின் உற்பத்தி இடம்பெறும் அதேவேளை, 5 சதவீத மின் உற்பத்தி மாத்திரமே எரிபொருட்களால் இடம்பெறுகிறது.

நீர்மின் உற்பத்தியின் போது ஒரு மின் அலகுக்கு 57.85 சதத்துக்கும் 2.50 ரூபாவே செலவாகிறது. ஆனால் எரிபொருள் ஊடான மின் உற்பத்திக்கு அலகொன்றுக்கு 105 ரூபா வரை செலவிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது 65 சதவீதம் நீர் மின் உற்பத்தி என்பதால் மின்சாரசபைக்கு பாரிய தொகை மிஞ்சுகிறது.

ஜே.வி.பி.யினரால் 76 ஆண்டுகள் சாபக் காலம் எனக் கூறப்படும் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட விக்டோரியா, ரந்தெனிகல, ரன்தம்பே, சமனலவாவி, கொத்மலை நீர் தேக்கங்களாலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நன்மையை அனுபவிக்கிறது. தேர்தல் மேடைகளில் 30 சதவீதமாக மின் கட்டணம் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறு 30 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு 3 ஆண்டுகள் செல்லும் என்று வசந்த சமரசிங்க குறிப்பிடுகின்றார். மின் கட்டண திருத்தம் குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வசந்த சமரசிங்கவுக்கு இல்லை என்பதை கூட அவர் அறியாமலிருக்கின்றார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கே அந்த அதிகாரம் இருக்கிறது.

மின் கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாத்திரமின்றி, சிறு மற்றும் பாரிய தொழிற்சாலைகளை நடத்துவோரும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் அவர்கள் மின் கட்டணத்தைப் பார்த்து பதறி ஓடுகின்றனர். எனவே மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00