வவுனியாவில் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைதுசெய்த நிலையில் அந்தபகுதியில் குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டிருந்தது.
வவுனியாநீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதானவீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்;
நீதிமன்றால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் அந்தவீதியில் நிற்பதை அவதானித்த வவுனியா பொலிசார் அவரை மடக்கிப்பிடித்தனர். இதன்போது அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதேவேளை குறித்த நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டபோது அந்தபகுதியில் தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்து குழப்பம் விளைவித்தார்கள் என தெரிவித்து மேலும் இரண்டு பேரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM