கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 16 பேரிடமும் சிறு தொகையாக பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 1 கோடி 10 இலட்சம் மோசடி: வவுனியாவில் ஒருவர் கைது
Published By: Vishnu
10 Dec, 2024 | 01:12 AM
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM