நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டமைக்கான எந்தவொரு சான்றுகளும் இல்லாத பதிவு செய்யப்படாத பொருத்தப்பட்ட சொகுசுகார் ஒன்றினை பயன்படுத்திய குற்றச்சாட்டில் தம்மை கைது செய்தமை சட்டத்துக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீளப்பெறப்பட்டது.
இந்த ரிட் மனு நேற்று மேன்முறையீட்டு தலைமை நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம், தமது சேவை பெறுநர் தற்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்தார்.
இதற்கமைய அவர் இந்த மனுவைத் தொடர விரும்பவில்லை என்றும் அதனை வாபஸ் பெற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அதற்கான அனுமதியை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, இந்த மனுவை மீளப்பெற அனுமதி வழங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM