(எம்.வை.எம்.சியாம்)
தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களை பார்த்து நாம் அனுதாபப்படுகிறோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதி அமைச்சரிடம் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி - தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதல்லவா?
பதில் - நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று இன்னும் ஒரு மாத காலம் கூட ஆகவில்லை. இந்த நாட்களில் நாம் எமது எதிர்கால பயணத்திற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். எமக்கென்று தெளிவான கொள்கைகள், திட்டங்கள் உள்ளன.நாம் நாட்டு மக்களிடத்தில் தெளிவான திட்டங்களை முன்வைத்துள்ளோம். எனவே நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
அதற்கு மாற்றமாக ஒருபோதும் செயல்படமாட்டோம். தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். உண்மையில் அவர்களை பார்த்து நாம் அனுதாபப்படுகிறோம். இதனை தவிர வேறொன்றும் எம்மால் செய்ய முடியாது. இந்த நாட்டை சரியான பாதையில் நாம் வழிநடத்துவோம் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.
அதேபோன்று அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் 'கிளின் ஸ்ரீலங்கா ' திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். வறுமை ஒழிக்கும் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். டிஜிட்டல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை நாம் மேம்படுத்துவோம்.
கேள்வி - நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதல்லவா?
பதில் - ஏற்கனவே ஜனாதிபதி அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடி அரிசிக்கு நிர்ணய விலையை அறிவித்துள்ளார். எனவே அது சரியாக நடக்கும் என நாம் நம்புகிறோம். அவ்வாறில்லையாயின் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். ஜனாதிபதி கூறியதை போன்று இந்த துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே இது மக்களின் சொத்து. அத்துடன் இது மக்களின் பிரதான உணவாகும். இதில் எவருக்கு விளையாட முடியாதுஎனவே நிலைமை புரிந்து இந்த துறையில் உள்ளவர்கள் அரிசியை தட்டுப்பாடின்றி நிர்ணய விலையில் வழங்குவார்கள் என நாம் நம்புகிறோம்.குறுகிய காலப்பகுதிக்குள் இந்த பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண்போம்.
கேள்வி - அரிசி ஆலை உரிமையாளர் டட்லி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் அல்லவா?
பதில் - எவ்வாறாயினும் அவர் நாட்டுக்கு வந்தாக வேண்டும். எங்கு செல்வது?அவர் நாட்டில் இருந்து வெளியேறினாலும் அவரது அரிசி ஆலைகள் நாட்டிலேயே உள்ளன. அவற்றை கொண்டு செல்ல முடியாது. எனவே நாம் குழப்பமடைய போவதில்லை. இந்த தரப்பினர் எமக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணை பற்றி நன்கறிவார்கள். எனவே மக்களின் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என நாம் நம்புகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM