வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த போலி வைத்தியர் கைது!

Published By: Digital Desk 2

09 Dec, 2024 | 05:32 PM
image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்த போலி வைத்தியர் ஒருவர் நுகேகொடை பொலிஸ்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் , பாமன்கட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து BMW மற்றும் KDH ஆகிய இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் கொட்டாவை பிரதேசத்தில் உள்ள கார் வாடகை நிறுவனம் ஒன்றிலிருந்து வாடகைக்கு பெற்ற KDH ரக சொகுசு வாகனம் ஒன்றிற்கு போலி ஆவணங்களை தயாரித்து அதனை மீரிகம பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் , முல்லேரியா பிரதேசத்தில் உள்ள கார் வாடகை நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெற்ற BMW ரக சொகுசு வாகனம் ஒன்றிற்கு போலி ஆவணங்களை தயாரித்து அதனை பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள கணக்காளர் ஒருவருக்கு ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24
news-image

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த...

2025-01-23 20:53:35
news-image

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற...

2025-01-23 20:22:37
news-image

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு...

2025-01-23 16:57:32
news-image

மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது...

2025-01-23 19:57:56
news-image

நாட்டில் முதலீடு செய்வதற்கு பெருமளவு முதலீட்டாளர்கள்...

2025-01-23 17:41:01
news-image

நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி விபத்து; 8...

2025-01-23 18:53:25
news-image

அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை...

2025-01-23 20:01:09
news-image

புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்களிடையே குறைந்து பெண்களிடையே...

2025-01-23 18:17:56
news-image

கல்கிஸ்ஸையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-01-23 18:08:21
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்...

2025-01-23 20:49:51
news-image

அமெரிக்கத் தூதுவர் - சுகாதார அமைச்சர்...

2025-01-23 18:46:00