மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கூரிய ஆயுதங்களுடன் கொள்ளை ; இருவர் கைது

09 Dec, 2024 | 04:36 PM
image

மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் பணிப் பெண்களிடம் கூரிய ஆயுதங்களை காண்பித்து அவர்களை மிரட்டி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர்கள் இருவரும் கொஸ்கம மற்றும் வாதுவ ஆகிய பிரதேசங்களில் உள்ள மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் பணிப் பெண்களிடம் கூரிய ஆயுதங்களை காண்பித்து அவர்களை மிரட்டி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் சேதவத்தை பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டது என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24
news-image

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த...

2025-01-23 20:53:35
news-image

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற...

2025-01-23 20:22:37
news-image

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு...

2025-01-23 16:57:32
news-image

மட்டு. திருப்பெருந்துறையில் மைதானம் ஒன்றை தனது...

2025-01-23 19:57:56
news-image

நாட்டில் முதலீடு செய்வதற்கு பெருமளவு முதலீட்டாளர்கள்...

2025-01-23 17:41:01
news-image

நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி விபத்து; 8...

2025-01-23 18:53:25
news-image

அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை...

2025-01-23 20:01:09