பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை ; வளிமண்டலவியல் திணைக்களம்

09 Dec, 2024 | 04:33 PM
image

(எம்.மனோசித்ரா)

வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது பலவீனமடைந்து வருகிறது. எனினும் தளம்பல் நிலை அவ்வாறே காணப்படுகிறது. இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கியதாக காற்று வீசும் திசை அமைந்துள்ளதால் இந்த தாழமுக்கம் வலுப்பெறாமல், பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று  திங்கட்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த தாழமுக்கம் கிழக்கு கடற்பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள ஆழமான கடலிலேயே நிலை கொண்டுள்ளது. எனவே அந்த பகுதியில் மாத்திரம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும். இதன் போது குறித்த கடற்பகுதியில் தளம்பல் நிலை ஏற்படக் கூடும்.

குறிப்பாக காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இதன் மறைமுக தாக்கத்தால் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அதிகரிக்கக் கூடும். மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இங்கு 30 - 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24