(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 109 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, தொடரை 0 - 2 என பறிகொடுத்தது.
இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 63.33 சதவீத புள்ளிகளுடன் மீண்டும் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஏற்கனவே 50.00 சதவீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலிருந்த இலங்கையின் சதவீத புள்ளிகள் 04.55 சதவீதத்தால் குறைந்துள்ளது. எனினும் 45.45 சதவீத புள்ளிகளுடன் தொடர்ந்தும் அதே இடத்தில் இருக்கிறது.
அவுஸ்திரேலியா 60.71 சதவீத புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இந்தியா 57.29 சதவீத புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.
இரண்டாவது போட்டியில் 348 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கையின் வெற்றிக்கு கடைசி நாளன்று மேலும் 143 ஓட்டங்களும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு 5 விக்கெட்களும் தேவைப்பட்டது.
அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் கடைசி நாள் ஆட்டத்தை தலா 39 ஓட்டங்களுடன் தொடர்ந்தனர்.
அவர்கள் இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தனர்.
ஆனால், மொத்த எண்ணிக்கை 219 ஓட்டங்களாக இருந்தபோது குசல் மெண்டிஸ் நிதானத்தை இழந்தவராக தனது விக்கெட்டை கேஷவ் மஹாராஜிடம் தாரைவார்த்தார்.
குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் தனஞ்சய டி சில்வா (50) ஆட்டம் இழக்க இலங்கையிடம் இருந்த வெற்றிக்கான சொற்ப வாய்ப்பும் அற்றுப் போனது.
கேஷவ் மஹாராஜ் கடைசியாக வீழந்த 5 விக்கெட்களில் நான்கை கைப்பற்றி தென் ஆபிரிக்காவுக்கு வெற்றியை வேளையோடு கிடைக்கச் செய்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 358 (கய்ல் வெரின் 105, ரெயான் ரிக்ல்டன் 101, டெம்பா பவுமா 78, லஹிரு குமார 79 - 4 விக்., அசித்த பெர்னாண்டோ 102 - 3 விக்., விஷ்வா பெர்னாண்டோ 65 - 2 விக்.)
இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 328 (பெத்தும் நிஸ்ஸன்க 89, கமிந்து மெண்டிஸ் 48, தினேஷ் சந்திமால் 44, ஏஞ்சலோ மெத்யூஸ் 44, டேன் பெட்டர்சன் 71 - 5 விக்., கேஷவ் மஹாராஜ் 65 - 2 விக்., மார்க்கோ ஜென்சென் 100 - 2 விக்.)
தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 317 (டெம்பா பவுமா 66, ஏய்டன் மார்க்ராம் 55, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 47, டேவிட் பெடிங்டன் 35, ப்ரபாத் ஜயசூரிய 129 - 5 விக்., விஷ்வா பெர்னாண்டோ 47 - 2 விக்.)
இலங்கை 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 348 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 238 (தனஞ்சய டி சில்வா 50, குசல் மெண்டிஸ் 46, கமிந்து மெண்டிஸ் 35, ஏஞ்சலோ மெத்யூஸ் 32, தினேஷ் சந்திமால் 29, கேஷ்வ் மஹாராஜ் 76 - 5 விக்., டேன் பெட்டர்சன் 33 - 2 விக்., கெகிசோ ரபாடா 63 - 2 விக்.)
ஆட்டநாயகன்: டேன் பேட்டர்சன்
தொடர்நாயகன்: டெம்பா பவுமா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM