நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்காவின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு மாவா போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து குறித்த கடையில் மறைத்து வைத்திருந்த 4 கிலோ 200 கிராம் மாவா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அவர் இன்று திங்கட்கிழமை (09) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் இதன் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM