பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஜனாதிபதியால் நியமனம் !

09 Dec, 2024 | 04:29 PM
image

இரத்தினபுரி மாவட்ட கொடகவெல பிரதேச செயலக பிரிவின் கொடகவெல, ஒபநாயக்க, வெலிகபொல ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான நியமன கடிதம்  அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதோடு, நியமனத்தை பெற்றுக்கொண்ட பின் பிரதி அமைச்சர் பிரதீப் கருத்து தெரிவிக்கையில், 

 "கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினர் மக்கள் சேவையினை "மாற்றாந்தாய் மனப்பான்மையோடு" சேவைகளை மேற்கொண்டனர். 

இனிவரும் காலங்களில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளின் அடிப்படையில் தேசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்புடையதாக பிரதேச மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சகல அபிவிருத்தி பணிகளையும் ஒருங்கிணைப்பு செய்வதோடு அவற்றை பின்தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிவகைகளை மேற்கொள்வதோடு சகல மக்களுக்கும் இன, மத ,மொழி , பிரதேச வாதம் கடந்து மேற்கொள்வேன்"  என தெரிவித்தார்.

பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக  112,711விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்க பிரதீப், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ளதுடன் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்தின்  முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25
news-image

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு...

2025-01-23 22:11:12
news-image

அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம்...

2025-01-23 17:49:46
news-image

WTC அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடிய 'பேட்மேன்'...

2025-01-23 22:42:03
news-image

ரணில் - சஜித் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள்...

2025-01-23 17:00:15
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா...

2025-01-23 17:49:23
news-image

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம்...

2025-01-23 19:40:27
news-image

இரண்டு வருடங்களில் இலங்கை வங்கியின் வருமானம்...

2025-01-23 16:59:21
news-image

அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக...

2025-01-23 16:02:54
news-image

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் காலதாமத்தை...

2025-01-23 16:16:07
news-image

தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்த பேராசிரியர் மெத்திகா...

2025-01-23 16:20:24