சிறிய அளவில் முதலீடு செய்து நாளாந்தம் வியாபாரம் செய்து அதனூடாக லாபத்தை சம்பாதிக்கும் குறு வியாபாரிகள் இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு விவரிக்க இயலாத காரணங்களாலோ வியாபாரம் பாதிக்கக்கூடும். இவர்களால் அன்றைய திகதியில் முதலீடு செய்த சிறிய தொகையையோ அல்லது அதனூடாக கிடைக்கும் லாபத்தையோ பெற இயலாத நிலை உண்டாகும்.
இவர்கள் மீண்டும் வட்டிக்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படும். இத்தகைய தருணங்களில் அவர்கள் நினைத்த இடத்திலிருந்து நினைத்த அளவிற்கு பணம் வந்து விடாதா...! என ஏக்கம் கொள்வர். வேறு சிலர் இன்றைய திகதியில் வியாபாரம் செழித்து லாபம் சிறிதளவு அதிகமாக கிடைக்காதா..! என்றும் ஆதங்கம் அடைவர்.
வேறு சிலர் இன்றைய திகதியில் லாபம் கிடைத்தால் கடனை அடைக்கலாமே..! என எண்ணுவர். இவர்கள் அனைவரும் நாளாந்தம் தன வரவு இயல்பான அளவைவிட கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என விரும்பினால் இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பிரத்யேக வழிமுறையை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்:
A 4 வடிவிலான அச்சிடப்படாத தூய வெண்மை வண்ண காகிதம். சிறிதளவு கல் உப்பு.
வெள்ளிக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் ஏழு மணிக்குள் சுக்கிர ஓரை எனப்படும் தருணத்தில் ஒரு தூய வெள்ளை வண்ண காகிதத்தின் இரு புறங்களையும் கல் உப்பை கொண்டு சீராக தேய்க்க வேண்டும். காகிதத்தில் தேய்ப்பதால் கிழிந்து விடாமல் கவனமாக தேய்க்க வேண்டும்.
அந்த கல்லுப்பு தடவிய காகிதத்தை மதியம் ஒன்று மணி முதல் 2 மணி வரை உள்ள சுக்கிர ஹோரையில் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அதனை பார்த்து 'ஏகம் தனம் சர்வம் சித்திக்கும் ' எனும் மந்திரத்தை மகாலட்சுமி தாயாரை மனதில் நினைத்து 108 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு அந்த கல் உப்பு தடவிய காகிதத்தை உங்களுடைய தலையணை உறைக்குள் பத்திரமாக வைத்து விடுங்கள்.
அடுத்த நாள் மதியம் அல்லது சுக்கிர ஹோரை எந்த தருணம் என்பதனை நாட்காட்டி வழியாக தெரிந்து கொண்டு, அந்த ஓரை தருணத்தில் மீண்டும் கல் உப்பு தடவிய காகிதத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தாயாரை மனதில் நினைத்து 54 முறை, 'ஏகம் தனம் சர்வம் சித்திக்கும்' எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இரண்டாவது வெள்ளிக்கிழமை வரும் திகதியில் உங்களுடைய தலையணை உறையில் இருக்கும் கல் உப்பு தடவிய காகிதத்தை புதிதாக மாற்றி விடுங்கள்.
தொடர்ந்து 48 நாட்கள் அல்லது 48 வாரங்கள் இந்த கல் உப்பு தடவிய காகிதம் மற்றும் மந்திரத்தை உச்சரித்தால் உங்களுடைய வியாபாரத்தில் நாளாந்தம் வரும் வரவை விட தன வரவு அதிகரித்து, உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM