(நெவில் அன்தனி)
ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 20.04 செக்கன்களில் ஓடி முடித்ததன் மூலம் அரை நூற்றாண்டு நீடித்த அவுஸ்திரேலியா மற்றும் ஓஷானியா சாதனையையும் 16 வயதுடையோருக்கான யுசெய்ன் போல்டின் சாதனையையும் அவுஸ்திரேலியாவின் கௌட் கௌட் முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.
அவுஸ்திரேலிய அனைத்துப் பாடசாலைகள் சம்பியன்ஷிப் போட்டியிலேயே கௌட் கௌட் (Gout Gout) இந்த புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான 200 ஓட்டப் போட்டியில் 1968ஆம் ஆண்டு பீட்டர் நோமன் நிலைநாட்டிய ஓஷானியாவுக்கான (கடல்சூழ் நாடுகள்) 20.06 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்த கௌட் கௌட், 2003ஆம் ஆண்டு யுசெயன் போல்டினால் நிலைநாட்டப்பட்ட 16 வயதுடையவர்களுக்கான 20.13 செக்கன்கள் என்ற உலக சாதனையையும் முறியடித்து வரலாறு படைத்தார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக அரங்க 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் கொண்டுள்ளார். ஏரியொன் நைட்டன் என்பவரே 19.84 செக்கன்கள் என்ற அதிசிறந்த நேரப் பெறுதியைக் கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இந்த சாதனையை நிலைநாட்டிய கௌட் கௌட், அதற்கு ஒரு தினத்திற்கு முன்னர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.17 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றை ஒரு செக்கனுக்கு 3.4 மீற்றர் நேர்த்திசை காற்று வேக உதவியுடன் 10.04 செக்கன்களில் கௌட் கௌட் நிறைவுசெய்திருந்தார்.
'இந்த நேரப் பெறுதிகள் வயது வந்தவர்களுக்கானது. நான் ஒரு சிறுவனாக அதே நேரங்களில் ஓடுகின்றேன். அவை எனக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்' என மிக நீண்டகால அவுஸ்திரேலிய சாதனையை முறியடித்த பின்னர் கௌட் கௌட் தெரிவித்தார்.
'என்னால் செய்ய முடியும் என்பதை நான் இப்போது செய்துள்ளேன். நான் எதையாவது செய்ய வேண்டும் என எனக்குள்ளே கூறிக்கொண்டால் அதை செய்துமுடிக்கும் வரை எனது முயற்சி தொடரும்' என அவர் மேலும் கூறினார்.
அவுஸ்திரேலிய அனைத்து பாடசாலைகள் சம்பியன்ஷிப்புக்கு முன்பதாக கௌட் கௌட்டின் அதிசிறந்த நேரப் பெறுதிகள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 10.29 செக்கன்களாகவும் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 20.29 செக்கன்களாகவும் இருந்தது.
சூடானிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பெற்றோருக்கு குவின்ஸ்லாந்தின் இஸ்ப்விச் நகரில் 2007 டிசம்பர் 29ஆம் திகதி பிறந்த கௌட் கௌட், ஆரம்பத்தில் கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு காட்டினார். கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது விருப்பத்திற்குரிய கால்பந்தாட்ட வீரராவார்.
ஆனால், காலப்போக்கில் அவர் மெய்வல்லுநர் விளையாட்டைத் தேர்ந்தெடுத்ததுடன் மூன்று வருடங்களில் அவுஸ்திரேலியாவின் அதிசிறந்த இளைய குறுந்தூர ஓட்ட மன்னனாக உருவெடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM