எம்மில் பலரும் குறிப்பாக மூத்த உறுப்பினர்கள் தங்கள் அன்பிற்குரிய அல்லது நெருக்கமானவர்களை இழந்தால் அவர்களின் பிரிவின் துயரத்தை தாங்க இயலாமல் தவிப்பர். இவர்களுக்கு புரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் எனும் இதய பாதிப்பு ஏற்படும் என்றும், இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து நிவாரண சிகிச்சையை பெற வேண்டும் என்றும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எம்மில் சிலருக்கு இதய பாதிப்பு ஏற்படக்கூடும். திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கலாம் அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக நினைக்கலாம். உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அவர்களை பரிசோதித்தால் இயல்பான மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதில்லை.
மேலும் துல்லியமாக பிரத்யேக பரிசோதனை மூலம் அவதானித்தால் இவர்களது இதயத்திற்கு குருதியை பம்ப் செய்யும் ஒரு பகுதி அதனுடைய திறனை இழந்து இருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு புரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் என மருத்துவ மொழியில் குறிப்பிடுகிறார்கள்.
இதற்கு ஸ்ட்ரெஸ் கார்டியோமயோபதி என்றும், டகோட்சுபோ கார்டியோமயோபதி என்றும் , அபிகல் பலூனிங் சின்ட்ரோம் என்றும் வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஐந்து அல்லது ஆறு மணி தியாலம் வரை நீடிக்கும் சிக்கலான சத்திர சிகிச்சை, பெருந் தொற்று காலகட்டத்தில் திடீரென்று ஏற்படும் மூச்சு திணறல், நெருக்கமானவர்களின் அல்லது அன்பிற்குரியவர்களின் உயிரிழப்பு, அன்பு செலுத்திக் கொண்டிருக்கும் நபர்களிடமிருந்து எதிர்பாராத வகையினதான விவாதம் என பல்வேறு காரணங்களால் இத்தகைய இதய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இந்த தருணத்தில் உடலில் கார்டிசோல் எனும் ஆபத்தை ஏற்படுத்தும் ஹோர்மோனின் உற்பத்தி இயல்பான அளவைவிட கூடுதலாக உருவாகுவதால் இதய இயக்கத்திற்கு பாதிப்பு உண்டாகிறது. இந்த தருணத்தில் அவர்களுக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை - உளவியல் சிகிச்சை - இயன்முறை சிகிச்சை - ஆகியவற்றை ஒருங்கிணைந்தோ அல்லது பிரத்யேகமாகவோ அளித்து நிவாரணம் வழங்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பெரும்பாலும் இத்தகைய பாதிப்பு மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்மணிகளுக்கு ஆண்களை விட அதிகம் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இத்தகைய பாதிப்பு நிகழாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு குடும்ப உறுப்பினர்கள், உறவு மேலாண்மை மீதும் கவனம் செலுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வைத்தியர் வேணி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM