மலையாளத்தின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷேன் நிஹாம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காதல் சடுகுடு' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
'ரங்கோலி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மெட்ராஸ்காரன் ' எனும் திரைப்படத்தில் ஷேன் நிஹாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ். ஆர் . புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'காதல் சடுகுடு' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது.
ஏ. ஆர். ரஹ்மான், வைரமுத்து , மணிரத்னம் கூட்டணியில் வெளியான 'அலைபாயுதே' படத்தில் இடம்பெற்ற 'காதல் சடுகுடு' என்ற பாடலின் ரீமிக்ஸ் ஆக வெளியாகி இருக்கும் இந்த பாடலை பின்னணி பாடகர் ஆர்கே ஆதித்யா பாடியிருக்கிறார்.
இந்தப் பாடலில் தோன்றி நடனமாடியுள்ள ஷேன் நிஹாம் , நிஹாரிகா ஜோடி இளம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ரீமிக்ஸ் ஆக இருந்தாலும் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். பாடலை ரசிக்கும் படி உருவாக்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM