37 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஆசிய குத்துச்சண்டைப் பதக்கம் : உமயங்கன மிஹிரன் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்

09 Dec, 2024 | 02:01 PM
image

(நெவில் அன்தனி)

தாய்லாந்தின் சியாங் மாய் மண்டபத்தில் நடைபெற்றுவரும் ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் பசிந்து உமயங்கன மிஹிரன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

குவைத் நகரில் 1987இல் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பி.எல்.ஜே. ரட்னசிறி வெண்கலப் பதக்கம் வென்று 37 வருடங்களின் பின்னர் ஆசிய குத்துச் சண்டையில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்தது இதுவே முதல் தடவையாகும்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் மலேசியாவின் முதல் நிலை வீரரும் 22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்றவருமான மொஹமத் அப்துல் கய்யும் பின் ஆரிபின் என்பவரை வெற்றிகொண்டதன் மூலம் பதக்கம் ஒன்றை மிஹிரன் உறுதி செய்துகொண்டிருந்தார்.

ஞாயிற்றக்கிழமை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 22 வயதுக்குட்பட்ட ஆசிய சம்பியன் ஆசில்பெக் ஜாலிலோவ் (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்ட உமயங்கன மிஹிரன் புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது.

20 வயதுடைய ஜாலிலோவைவிட சர்வதேச குத்துச்சண்டையில் அனுபவம் குறைந்தவராக இருந்தபோதிலும் முதல் சுற்றில் கடுமையாக மோதிய 21 வயதான மிஹிரன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்தியஸ்தர்கள் வழங்கிய புள்ளிகளின் அடிப்படையில் 0 - 10 என மிஹரன் தோல்வி அடைந்தார்.

இரண்டாம் சுற்றிலும் தொடர்ந்து 3ஆவதும் கடைசியுமான  சுற்றிலும் தலா 10 - 9 என ஜாலிலோவ் வெற்றிபெற்றதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர். 

இதற்கு அமைய ஒட்டுமொத்த புள்ளிகள் நிலையில் 27 - 30 என தோல்வி அடைந்த மிஹிரன், வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

ஆசிய உயரடுக்கு குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக 13 போட்டியாளர்கள் பங்குபற்றியபோதிலும் மிஹிரன் மாத்திரமே பதக்கம் வென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42