(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்ட விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடிபணிந்துள்ளார்.ஆட்சிக்கு வந்தவுடன் நாணய நிதிய செயற்திட்டத்தில் இருந்து விலகுவதாக வழங்கிய வாக்குறுதி தொடர்பில் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளுக்கும், நடைமுறை நிர்வாகத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. கடந்த கால அரசாங்கங்களின் நிர்வாகத்தை விமர்சித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். ஆனால் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் என்று குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் அவர் நாட்டு மக்களை தவறாக வழி நடத்தியுள்ளார்.
நாணய நிதியத்துடனான நீட்டிக்கப்பட்ட செயற்திட்ட விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடிபணிந்துள்ளார். நாணய நிதியம் முன்வைக்கும் சகல நிபந்தனைகளுக்கும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நிபந்தனைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
நாணய நிதிய செயற்திட்டம் தொடர்பில் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் குறித்து நாட்டு மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும். பொருளாதார மீட்சிக்கான கொள்கைகளை முன்வைக்காமல் வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் முன்வைத்து ஆட்சிக்கு வந்தது.ஆகவே வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் நினைவுப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM