பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் அரிசி தட்டுப்பாட்டை நீக்க முடியும் - தேசிய கமக்காரர் அதிகார சபை

Published By: Digital Desk 7

09 Dec, 2024 | 02:16 PM
image

விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் அரிசி தட்டுப்பாட்டை நீக்க முடியும் என தேசிய கமக்காரர் அதிகார சபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்தார்.

தேசிய கமக்கார அதிகார சபையின் ஊடக சந்திப்பு இன்று (9) மட்டக்களப்பில் உள்ள கம நல அபிவிருத்தி திணைக்களத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தேசிய கமக்கார அதிகார சபையின் தலைவர், பொருளாளர், உப செயலாளர் உள்ளிட்ட தேசிய அதிகார சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

தேசிய கமக்கார அதிகார சபையின் தலைவர் திலக் பண்டார கருத்து தெரிவிக்கையில்,

விவசாயிகளாகிய எங்களை அறியாமல் அரசினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் நாங்கள் கவலை தெரிவிக்கின்றோம்.

மட்டக்களப்பில் 2 இலட்சம் ஏக்கர் நிலங்களில் பயிர்களை விதைத்திருந்தாலும், அதில் 1 1/2 இலட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் மட்டக்களப்பில் வெள்ள நீர் வயல்களிலிருந்து வடிந்தோடவில்லை. இதுவரை பழமையான சுற்று நிருபத்தை வைத்தே நஷ்ட ஈடுகளை வழங்க தீர்மானித்துள்ளமை கவலையளிக்கிறது.

விவசாயிகள் பசளை உள்ளிட்ட பல விடயங்களுக்கு அதிக பணத்தினை செலவழித்தாலும், இவர்களுக்கு வழங்கும் நஷ்ட ஈடு போதுமானதாக இல்லை என நாம் அரசுக்கு அறியத் தருகிறோம்.

ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு போதுமானதாக இல்லை. சில இடங்களில் வயல்களில் மண் மூடியிருக்கிறது. வெள்ள நீர் வடியவில்லை. அதை நாம் நேரடியாக காண்கின்றோம். விவசாயிகளுக்கு எதிராக செயற்பட நினைக்க வேண்டாம் என அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.

டட்லி முதலாளி போன்றோர்களை வைத்து விலை தொடர்பில் கதைத்தார்கள். ஜனாதிபதி பல கருத்துக்களை சொன்னாலும், ஒளித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவர முடியும். வெட்டும் நாட்கள் வரும் போது நெல் குறைந்த விலையிலேயே எடுக்கப்படுகிறது. உற்பத்தி விலையை குறைப்பதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொள்ள வேண்டும் என தேசிய கமக்கார அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய கமக்கார அதிகார சபையின் உப செயலாளர் தக்சில தேசப் பிரிய கருத்து தெரிவிக்கையில்,

மரத்தால் விழுந்தவரை மாடு மிதிப்பது போலவே தற்போது விவசாயிகளின் நிலை காணப்படுகிறது.

நாங்கள் விவசாய அமைச்சுக்கு ஒரு கோரிக்கை முன்வைக்கவுள்ளோம். அதனை வழங்கி 7 நாட்களில் எமக்கு தீர்வு கிடைக்காவிடின் விவசாயிகளான நாங்கள் யார் என்பதை அரசுக்கு காட்டுவோம்.

கடன் பட்டு வயல்களில் பயிர்ச்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகளுடன் கலந்துரையாட அரசாங்கத்தை நாங்கள் அழைக்கின்றோம். ஒரு இலட்சம் நஷ்ட ஈட்டினை நாங்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்க்கிறோம்.

அரசின் விலை தீர்மானித்திருந்தாலும், 220 ரூபா என்பது அனைவரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்கும் விடயமாகவே நாங்கள் பார்க்கிறோம். இது வியாபாரிகளுக்கு அதிக இலாபத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது 40 ஆயிரம் வழங்குவதாக கூறினாலும், அதிக பாதிப்பை அடைந்த மட்டக்களப்பு போன்ற விவசாயிகளுக்கு அது போதுமானதாக இல்லை என பொருளாளர் உதயகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

விவசாயிகளுக்கு தற்போது ஒரு சுற்று நிருபம் வந்துள்ளது. பசளைக்கான நிதியை பெற்றுக்கொண்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்போவதில்லை என்று. இது ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.

கடந்த அரசு விவசாயிகளுக்கு இளைத்த அநீதியே அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதனால் ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரை நாங்கள் எம்முடன் கதைப்பதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

ஜனாதிபதியால் முடியாதா இந்த பொலன்னறுவையில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சென்று பார்வையிட என்று விவசாயிகளாகிய நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.

வெளிநாட்டிலிருந்து அதிக அரிசியினை இறக்குமதி செய்தால் இந்த விவசாயிகளின் நிலை என்ன?

கோட்டாவுக்கு நடந்தது என்ன என சற்று அரசு சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகார சபையின் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் கருத்து தெரிவிக்கையில்,

பெரும்போக வெள்ள அனர்த்தத்தினை தேசிய அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர் பார்வையிட வந்துள்ள நிலையில், எமது வயல் நிலத்தை மீண்டும் திருத்துவதாயின் ஒரு ஏக்கருக்கு 1 இலட்சம் வரை தேவைப்படும். அதற்கான நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

உர மானியம் கோரியவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாம் பொறுப்பல்ல. விவசாய திணைக்களமே பொறுப்பு என கூற வேண்டும் என்றார்.

தேசிய அதிகார சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரமேஸ் கருத்து தெரிவிக்கையில்,

காப்புறுதி கொடுப்பனவினை அரசாங்கம் கொடுத்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை. மட்டக்களப்பில் மழை பெய்யாவிட்டாலும் பதுளை போன்ற பகுதிகளில் இருந்துவரும் நீரில் வயல்கள் மூழ்கிவிடுகின்றன.

இந்த ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்தபோது வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்து வைக்கப்பட்டிருந்தது.

220 ரூபாய் விலை நிர்ணயித்திருப்பது பொருத்தமான விடயம் அல்ல. 200 ரூபாய்க்கு அரிசியை வழங்க முடியுமென நான் தெரிவிக்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற...

2025-01-24 16:19:06
news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு...

2025-01-24 20:47:48
news-image

சுகாதார தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2025-01-24 16:11:11
news-image

வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு...

2025-01-24 19:49:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00